Today is a special summary revision of the electoral rolls in the 6780 petition, the public gave the work camp.
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2017ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி 01.09.2016 முதல் 30.09.2016 வரை நடைபெறுகிறது. அது சமயம் 01.01.2016 தேதியன்று தகுதியான நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியான வாக்காளர்களின் பெயர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் முகவரி போன்ற திருத்தங்களை மெற்கொள்ளவும், பெயர் நீக்கம் செய்யவும் இன்று ( 11.09.2016 ) ஞாயிற்று கிழமை சிறப்பு முகாம் அந்தந்த வாக்குசாவடிகளில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 638 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் இன்று (11.09.2016 ) காலை 09.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. இதில் பெயர் சேர்க்க (படிவம் 6) – 5110 நபர்களும் நீக்கம் செய்ய (படிவம் 7 ) – 145 நபர்களும் பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்ய (படிவம் 8)- 1080 நபர்களும் , பாகம் விட்டு பாகம் மாறுதல் செய்ய (படிவம் 8எ)- 445 நபர்களும் என ஆக மொத்தம் 6780 மனுக்கள் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 3604; நபர்களும் பெண் வாக்காளர்கள் 3176 நபர்களும் இதில் அடங்குவார்கள், என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.