Together with the disability to apply for Aavin’s canteen: Namakkal collector’s notice
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் விடுத்துள்ள அறிவிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கை கால்கள் பாதிக்கப்பட்ட, காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்க தங்களுக்கு சொந்த இடம், கட்டிடம் அல்லது வாடகைக்கு இடமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரை தளம் 7, 8 -ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் நேரில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.