பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் அருகே உள்ள வெங்கனூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு விருத்தாசலேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
கூகையூர் குடங்கை அழகு, வெங்கனூர் வேலை அழகு, திருவாரூர் தேர் அழகு, திருவிடைமருதூர் தெரு அழகு, என்பது (பழமொழி)
இக்கோவிலுக்கு பிரதோஷம், கார்த்திகை மாத சோமவாரம் மற்றும் விஷேச தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மேலும் முகூர்த்த தினங்களில் இக்கோவிலில் திருமணங்கள் அதிகளவில் நடைபெறும்.
வெளியூர்களிலிருந்து பொதுமக்கள் ஏராளமானோர் நாள்தோறும் வருகை புரிகின்றனர். அவ்வாறு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்கு வரும் பொழுது இயற்கை உபாதைகளுக்காக கழிவறை வசதியில்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதில் மிகவும் அதிக சிரமப்படுவது பெண் பக்தர்கள்தான்.
எனவே பிரசித்தி பெற்ற வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவில் அருகே கழிவறை வசதியும், பயணிகள் நிழலில் நின்று பஸ் ஏறும் வகையில் நிழற்குடை வசதியும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Toilet facilities should be set up in a temple near PERAMBALUR venganur viruttajalesvarar: Devotees request