Toll-free telephone to report election irregularities; Perambalur Collector Information.

பெரம்பலூர் கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 வருகின்ற 06.04.2021 அன்று நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரம்பலூர; சட்டமன்ற தொகுதியில் 165 இடங்களில் 428 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு 3,02,291 வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 177 இடங்களில் 388 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு 2,73,695 வாக்காளர்களும் என மொத்தம் 342 இடங்களில் 816 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு 5,75,986 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் 2021ல் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக கடைபிடித்திடவும், தேர்தல் விதிமீறல்கள் நடைபெறாமல் தடுத்திடவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான 1800 4256 375 மற்றும் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் சேவையில் உள்ள கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் 84387 71950 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார்கள் தொடர்பான புகைப்படங்கள் அனுப்பி புகார் தெரிவிக்கலாம்.

தொலைபேசி எண்களின் வாயிலாக பெறப்படுகின்ற புகார்கள் பதிவேடுகளில் முறையாக பதிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேல் நடவடிக்கைக்காக தகவல் தெரிவிக்கப்படும். அலுவலர்கள் புகார்களின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் மீண்டும் பதிவு செய்யப்படும்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும், நேர்மையாகவும் வாக்குப்பதிவு செய்திட மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!