Tomorrow, all the panchayats in Perambalur district administration – college students dengue awareness campaign

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளதாவது :

பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் பராவமல் தடுக்க தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கவேண்டும் என்று தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், தங்கள் சுற்றுப் புறங்களை தூய்மையாக பராமரிக்காமல் டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகும் வகையில் செயல்படுபவர்கள் மீது அபராதத் தொகையும் விதிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையின் சார்பில் மருத்துவர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களும், வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த் துறையின் சார்பில் ஊழியர்கள், அலுவலர்கள் என அனைத்து துறைகளின் சார்பில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் துப்புரவு பணி நடைபெற்று வருகின்றனது.

26.10.2017ம் தேதி பெரம்பலூர் மாவட்டததில் உள்ள 121 ஊராட்சியிலும், டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிகளும் இணைந்து, ஒரு ஊராட்சிக்கு 50 மாணவ மாணவிகள் மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள் வீதம் சுமார் 6,000-க்கும் மேற்பட்ட நபர்கள் டெங்கு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளார்கள்.

எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளுக்கு வருகை தர உள்ள தன்னாலர்வ கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!