Tomorrow World Earth Day Exhibition in Namakkal: Agricultural Science Center

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை டிச. 5ம் தேதி உலக மண் வள தினத்தை முன்னிட்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

விவசாயிகள், மாணவர்கள், பண்ணை மகளிர் மற்றும் களப்பணியாளர்களிடம் மண்வளத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் வேளாண்மை துறையுடன் இணைந்து இன்று 5ம் தேதி உலக மண் வள தினம் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம், மழை காலங்களில் ஏற்படும் மண்வள சீர்கேட்டை சரிசெய்யப்பயன்படும் உத்திகள் மற்றும் மானவாரி காலங்களில் மண்ணில் நீர் பிடிப்பு திறனை மேம்படுத்தும் முறைகள் பற்றிய விளக்க உரைகள் நடைபெறும்.

இத்துடன் மண் மற்றும் பாசனநீர் சேகாணீக்கும் முறைகள், விதை நேர்த்தி, தாவரக்கழிவுகளை மக்கும் உரமாக்குதல் பற்றிய செயல் விளக்கமும் மண்வளத்தை மேம்படுத்த தேவையான முக்கிய இடுப்பொருட்களான தக்கைப்பூண்டு, சணப்பை கொண்டு பயிர்செய்யப்பட்ட மாதிரி திடல்களுக்கும் நேரடியாக அழைத்து சென்று காண்பிக்கப்படும். இந்நிகழ்ச்சியின் முடிவில் விவசாயிகளுக்கு மண்வள மற்றும் பாசன நீர் வள அட்டைகள் வழங்கப்படும்.

ஆகவே மண்வளத்தை பாதுகாக்கும் வகையில் நடைபெறும் உலக மண் வள தின விழாவில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அகிலா தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!