சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் 22.12.2018 (சனிக்கிழமை காலை 11.00 மணியளவில்) திறப்பு விழா நடைடிபெற உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், பெரம்பலூர் மாவட்ட நிர்வாக நீதிபதியுமான பி.புகழேந்தி, ஏனைய நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து வைத்து நீதிமன்ற பணியினை துவக்கி வைக்கிறார்.
நீதிமன்ற திறப்பு விழாவில் மகிளா நீதிபதி என்.விஜயகாந்த், தலைமை நீதித்துறை நடுவர் ஏ.முரளீதரன், சார்பு நீதிபதி ஸ்ரீரிஜா, செயலாளர் ஆ.வினோதா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.கருப்பசாமி, நீதித்துறை நடுவர் பு.அசோக்பிரசாத், நீதித்துறை நடுவர் ஆ.மோகனப்பிரியா, மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், பார் அசோசியசன் சங்கத் தலைவர் இ.வள்ளுவன் நம்பி, செயலாளர் எம்.சுந்தரராஜன், அட்வகேட்ஸ் அசோசியசன் சங்கத் தலைவர் யு.முகமது இலியாஸ், செயலாளர் எஸ்.துரை, மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து நீதிமன்ற ஊழியர்கள், பொதுப் பணித்துறை மற்றும் அனைத்து அரசு துறைகளைச் சார்ந்தவர்களும் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.