பெரம்பலூரில் நாளைய நிகழ்ச்சிகள் :
பெரம்பலூர் எசனை கிராமததில் காட்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கிடா வெட்டு. மாவிளக்கு பூஜை, அலகு குத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இதே போன்று பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தில் அம்மன் கோவலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தீ மதி திருவிழா நடக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள க.எறையூர், கிழுமத்தூர், நெற்குணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சித்திரைத் திருவிழா தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.