“Tough sell overpriced fertilizers – Government Notice

fertilizer இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பு :

பெரம்பலூர் மாவட்டத்தில் எதிர்வரும் வேளாண் பருவத்தில் மக்காசோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்குத் தேவையான உரங்கள் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மண்பரிசோதனை முடிவு அறிக்கைபடி தங்களுக்கு தேவையான உரங்களை வாங்கி பயன்படுத்தவேண்டும்.

தற்சமயம் 50 கிலோ எடை கொண்ட உர மூட்டைகளின் விலையானது, வேம்பு கலந்த யூரியா ரூ.284-, ஸ்பிக் டிஏபி ரூ.1150-, ஐபிஎல் டிஏபி ரூ.1085-, எம்சிஎப் டிஏபி ரூ.1100-, கிரிப்கோ டிஏபி ரூ.1100-, இப்கோ டிஏபி ரூ.1100-, ஆர்சிஎப் டிஏபி ரூ.1100- ஸ்பிக் காம்ப்ளக்ஸ் 20:20:00:13 ரூ.875- பாக்டம்பாஸ் ரூ.889-,

துத்தநாகம் கலந்த பாக்டம்பாஸ் ரூ.914-, ஐபிஎல் 20:20:0:13 காம்ப்ளக்ஸ் ரூ.855-, கொரமண்டல் 20:20:0:13 காம்ப்ளக்ஸ் ரூ.875-, எம்.சி.எப் 20:20:0:13 காம்ப்ளக்ஸ் ரூ.865-, இப்கோ 20:20:0:13 காம்ப்ளக்ஸ் ரூ.825-, ஆர்சிஎப் 20:20:0:13 காம்ப்ளக்ஸ் ரூ.857-, விஜய் 17:17:17 காம்ப்ளக்ஸ் ரூ.1002-, இப்கோ 10:26:26 காம்ப்ளக்ஸ் ரூ.1030-,

கொரமண்டல் 16:20 காம்ப்ளக்ஸ் ரூ830ஃ-, ஐபில் 15:15:15 காம்பளக்ஸ் ரூ.840ஃ-, ஐபில் 16:16:16 காம்ப்ளக்ஸ் ரூ.850-, ஆர்சிஎப் 15:15:15 ரூ.878-, ஐபிஎல் பொட்டாஷ் ரூ.550-, ஃபாக்ட் பொட்டாஷ் ரூ.550-, எம்சிஎப் பொட்டாஷ் ரூ.550-, ஆர்சிஎப் பொட்டாஷ் ரூ.550-, கோத்தாரி சூப்பர் ரூ.367-, கிரின்ஸ்டார் சூப்பர் ரூ.360- என்ற விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

உர வியாபாரிகள் தங்களது கடைகளில் உரங்களுக்கான விலைப்பட்டியல் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மேலும் உரங்களை அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட அதிகமாக விற்கக் கூடாது, உரங்களுக்கான உரிய பில் வழங்கப்பட வேண்டும். இதனை மீறுவோர் மீது உரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 1985-ன் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

உரங்களை கண்காணிக்க மாவட்டத்தில் கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் உரங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் புகார்களுக்கு பெரம்பலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (அ. கீதா ) 94886 34047 என்ற எண்ணிலும்,

ஆலத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (சு. இராசசேகரன்) 95855 18920 என்ற எண்ணிலும், வேப்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ( அ. இளங்கோவன்) 94436 47698 என்ற எண்ணிலும்,

வேப்பந்தட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ( செ. பாபு ) 80128 49600 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!