Training for regional officers in Perambalur parliamentary constituency

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல், 2019ஐ முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 652 வாக்குச்சாவடி மையங்களும், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் 33 மண்டலங்களும், குன்னம் சட்டமன்றத் தொகுதியில் 30 மண்டலங்களும் என 63 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களுக்கென்று தனித்தனியே மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான, பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்த பயிற்சிவகுப்பு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில், பெரம்பலூர் ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

இவ்வகுப்பில், தேர;தல் பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும், பொறுப்புகள், ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்தும், அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள வாக்குச்சாவடி மையங்களை முழுமையாக ஆய்வு செய்து குடிநீர், கழிவறை, கைப்பிடியுடன் சாய்தளப் பாதை, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கிறதா, வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்ல வேண்டிய சாலைகள், பாதைகள் நல்ல நிலையில் உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்,

மேலும், தேர்தல் தொடர்பான நடத்தை விதிமீறல்களைத் தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, மண்டல அலுவலர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஏதேனும் விதிமீறல்கள் இருப்பின் இந்த குழுக்களிடமும், மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் இவர்களில் யாரேனும் ஒருவருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 1800 425 2240 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் தகவல்களைத் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவது குறித்த அடிப்படை பயிற்சியும், பாராளுமன்ற பொதுத்தேர்தல், 2019ல் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் சரி பார்ப்பு இயந்திரம் குறித்தும், இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) தேவநாதன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!