Training for SC ST students to get job opportunities in multinational companies: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தாட்கோ மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற போன்ற பயிற்சியினை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற (Aspring Minds Computer Adaptive Test (AMCAT) பயிற்சியினை வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியினை பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 3 மாதம் மற்றும் இப்பயிற்சியினை பெற அனைத்து செலவுகளும் தாட்கோவால் வழங்கப்படும்.

இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் AMCAT தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, சான்றிதழும் வழங்கப்படும். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெறலாம். இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!