Training for Subhiksha Charitable Women’s Self Help Group in Veepanthattai
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை சுபிக்ஷா தொண்டு நிறுவன அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சுபிக்ஷா தொண்டு நிறுவன இயக்குனர் சாமிநாதன் தலைமை தாங்கினார். நபார்டு வங்கி பொது மேலாளர் நவீன்குமார், ஐசிஐசிஐ வங்கியின் மண்டல மேலாளர் ரமேஷ்பாபு, விற்பனை மேலாளர் லோகேஷ், சுபிக்ஷா நிறுவன இணை இயக்குனர் முத்துராமலிங்கம், அரியலூர் மண்டல அலுவலர் அரவிந்தன் மற்றும் பலர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த பயிற்சி முகாமில் சுய உதவிக் குழுவினர்கள் கடன் பெறுவதற்கான வழிமுறைகள், கடன் திட்டங்கள், கணக்கு பதிவேடுகளை பராமரிக்கும் முறைகள், சேமிப்பு கடன் திட்டங்கள், தொழில் பயிற்சி வாய்ப்புகள், திறன் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மகளிர் சுய உதவி குழு தலைவி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த முகாமில் சுயசேவா நிதியமைப்பு தலைவர் இந்திரா காந்தி, பயிற்றுநர் லதா பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பணியாளர் ஜெயஸ்ரீ வரவேற்றுப் பேசினார். மகேஸ்வரி நன்றி கூறினார்.