Training on behalf of the Health Department for the Women’s Self Help Group to conduct house to house corona examination in Perambalur Municipality!
பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கரோனா நோயை தடுக்கும் வகையில் வீடு வீடாக சென்று கொரோனா மற்றும் உடல்நிலை பரிசோதனை செய்யும் முகாம் தொடங்கியது. பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 42 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் பரிசோதனை பயிற்சி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசியதாவது:
பெரம்பலூர், அரணாரை, துறைமங்கலம் ஆகிய நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர் வீடு வீடாக சென்று பொதுமக்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர் என்றார். அப்போது தொற்று கண்டறியப்பட்டால், உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வார்கள். பெரம்பலூர் நகர்ப்புற பகுதி மக்கள் இந்த முகாமினை பயன்படுத்தி முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் உதவி திட்ட மேலாளர் டாக்டர் கலைமணி, வட்டார தலைமை டாக்டர் சூரியபிரபா, டாக்டர் வளவன், சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.