Training to fill Health Assistant, Medical Technical Assistant posts: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் பிரதான் மந்திரி கிசான் கௌசல் விகாஸ் யோஜனா என்ற பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக சுகாதாரத்துறையில் கோவிட் – 19 தொற்றை ஒழிக்கும் விதமாக முன்கள பணியாளராக பணியாற்ற இலவசமாக கீழ்காணும் பிரிவுகளில் ஒரு மாதம் குறுகிய கால பயிற்சி வழங்கப்பட உள்ளது. அவை அவசர மருத்துவ டெக்னீசியன் பணி, பொது மருத்துவ சேவை உதவியாளர், தீவிர சிகிச்சை பிரிவு உதவியாளர், வீட்டு சுகாதார உதவியாளர், மருத்துவ உபகரண தொழில்நுட்ப உதவியாளர், இரத்த நாள துளையிடும் பணியாளர் பயிற்சி முடித்தவுடன் மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் தொழில் முறை பயிற்சியுடன் பணியில் சேரலாம்.
மேற்காணும் பயிற்சிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம். இந்த பயிற்சிகளில் சேர விரும்புவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி, பயிற்சியில் சேர விரும்பும் பிரிவு, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை dstoperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9488451405 தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களது விபரங்களை தெரிவித்து பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!