Transfer of Pensions to the State Treasury Department through Banks: Namakkal Collector
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் விடுத்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் ஓய்வூதியர்களில், பொதுத்துறை வங்கி திட்டத்தின் மூலம் நேரடியாக வங்கிகளில் ஓய்வூதியம் பெற்றவர்களின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தமிழக அரசின் உத்தரவின் படி கருவூலத்துறை மூலம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கித்திட்டத்தில் உள்ள தமிழக அரசு ஓய்வூதியர்கள் கடந்த ஆண்டு வரை நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நேர்காணலுக்கு சென்று வாழ்நாள் சான்றை அளித்து வந்தனர். தற்பொழுது அவர்களின் ஓய்வூதியம் கருவூலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் 2019ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜீன் 30 தேதிக்குள் சம்பந்தப்பட்ட கருவூலங்களில் நேர்காணலுக்கு சென்று, வாழ்நாள் சான்றினை சமர்ப்பிக்கவேண்டும்.
நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் வாழ்வு சான்றினை உரியபடிவத்தில் ஓய்வூதியம் பெற்றுவரும் கருவூலத்தில் சமர்ப்பிக்கவேண்டும் “ஜீவன்பிரமான்” என்ற இன்டர்நெட் முகவரி வழியாகவும் ஓய்வூதியர்கள்.
தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்து வாழ்வு சான்றினை இணையதள மூலமாக பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.