Transgender Day: Awareness camp organized by Perambalur Legal Services Commission!
பெரம்பலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு நேற்று திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் பேசியதாவது:
திருநங்கைகளுக்கும் ஆண்கள், பெண்கள் இணையாக சமவேலை வாய்ப்பு, சமஉரிமைகள் வழங்கப்பட்டு வருகிறது, ஒரு சில இடங்களில் காவலர்களாகவும், ஓட்டுனர்களாகவும் பணிபுரிந்து வருகின்றார்கள்.
மேலும் திருநங்கைகளுக்கான சட்ட உதவி தொடர்பாக எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சட்ட உதவி மையத்தை நாடலாம் என்றும் தங்களுக்கு மனு எழுத தெரிந்தால் தாங்களே மனு எழுதி வரலாம் அல்லது சட்ட உதவி மையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள சட்ட தன் ஆர்வலர்களால் உரிய முறையில் மனு எழுதப் பெற்று சட்ட உதவி மையம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார்.
ஓய்வு பெற்ற தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கண்ணையன் கலந்துகொண்டு திருநங்கைகளுக்கான விழிப்புணர்வுகள் குறித்தும் சிறப்பாக பேசினார். வழக்கறிஞர்கள் பேரா முருகையன், சிராஜுதீன், கவியரசு ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புயுரையாற்றினார்கள். பெரம்பலூர் மாவட்ட திருநங்கைகளின் தலைவி ராணி மற்றும் மனுஷா உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.