Transgender Day Festival: cake cut the celebration in Perambalur
பெரம்பலூர் : ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி திருநங்கைகள் தினமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசு அறிவித்ததையொட்டி வருடந்தோறும் திருநங்கைகளிள் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் கடைபிடிக்கும் விதமாக ஒவ்வொரு ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று கொண்டாடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்று கூடி பெரம்பலூர் வெங்கடேசபுரத்திலுள்ள ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை தொண்டு நிறுவன அலுவலகத்தில் கேக்வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். விழாவிற்கு மாவட்ட நிர்வாகி மனீஷா தலைமை வகித்தார். பின்னர், அனைவருடைய நிறை குறைகளையும் கேட்டு கலந்துரையாடினர்.
அப்போது அனைத்து திருநங்கைகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இந்த நாளை ஏற்படுத்தி கொடுத்த அரசிற்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் திருநங்கைகள் சார்பில் நன்றி தெரிவித்து கொண்டனர்.