Transport Minister Sivasankar presented the souvenir given by Thai Tamil Association to Tamil Nadu Chief Minister M.K.Stalin!
2ம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தாய்லாந்து நாட்டின், காஞ்சனபுரியில் 1.5.2024 அன்று நடைபெற்ற “நடுகல்” திறப்பு விழாவில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டபோது, தாய்லாந்து தமிழ் சங்கத்தினரால், தமிழ்நாடு முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசை முகாம் அலுவலகத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார். எம்.பி., எம்.எம். அப்துல்லா உடனிருந்தார்.