Travelers affect from Sunlight in Kirsnapuram bus stand, set up Sunshade roofs, Passengers requset to Perambalur MLA

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது கிருஷ்ணாபுரம் கிராமம். இந்த கிராமம், மேற்குப்பகுதியில் உள்ள அரும்பாவூர், பூலாம்பாடி, தொண்டைமாந்துறை, கோரையாறு, அ.மேட்டூர், மலையாளப்பட்டி ஆகிய ஊர்களையும்,

வடக்காக வீரகனூர், ஆத்தூர், சேலம், கெங்கவல்லி, தம்மம்பட்டி, மற்றும் தலைவாசல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை பகுதிகளையும், கிழக்கில், வெண்பாவூர், வடகரை, கை.களத்தூர், தொழுதூர் உள்ளிட்ட பகுதிகளையும், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையையும், தெற்கே வட்டத் தலைநகரான வேப்பந்தட்டை, எசனை, பெரம்பலூர், அரியலூர் திருச்சி மற்றும் அம்மாபாளையம், துறையூர் பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வாகன போக்குவரத்து உள்ள முக்கிய சந்திப்பாக உள்ளது.

இப்பகுதி வழியாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள், வந்து செல்கின்றனர். குறிப்பாக வட்டார தலைமை மருத்துவமனையும் இப்பகுதி அருகே அமைந்துள்ளது. மேலும் அங்கு நலம் பெற வரும் நோயர்களும், வீசும் அனல் வெயிலில் காத்திருந்து பேருந்து ஏறி செல்ல வேண்டியுள்ளது.

மேலும், கடைகள் மற்றும் விளம்பர பதாகைகள் ஆக்கிரமித்துள்ளதால் நிற்க, பொதுமக்கள் நிழல் தேடி அலையும் நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் சிரமத்த்தை கருத்தில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரி வரும் நிழற்குடையை உடனடியாக அமைத்து தர வேண்டும் என பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வனுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!