Treated, Quack doctor arrested near Namakkal : Police Investigation
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே மருந்துக் கடையில் சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம் அருகே ராமநாதபுரம் புதுாரைச் சேர்ந்தவர் பிரகாசம் (வயது 39).அவர் அப்பகுதியில் ஆங்கில மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார். தவிர,மருந்துக் கடையில் வைத்து மருத்துவ சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
முறையான கல்வித் தகுதியின்றி அவர் சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மேற்குறிப்பிட்ட புகார் உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து சேந்தமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் கருணாநிதி,சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்படி பிரகாசத்தை கைது செய்த போலீஸார்,அவர் சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்துவ உபகரணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.