Tribal people have to apply for caste certificate online; Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் பழங்குடியினர் (ST) சாதி சான்றுகள் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் நேரில் பெறப்பட்டு வருவாய் கோட்டாட்சியரால் சான்றுகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது பழங்குடியினர் சாதி சான்று பெற தமிழக அரசு இணையதளம் தொடங்கியுள்ளது. எனவே, பழங்குடியினர் சாதி சான்று பெற எதிர்வரும் 17.11.2021 அன்றைய தேதி வரை மட்டுமே பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் மனு செய்யலாம். அதன் பின்னர் இணையதளம் மூலம் மட்டுமே விண்ப்பிக்க இயலும். tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!