Trichy zone for the first time in the beginning of the modern police monitoring center in perambalur


திருச்சி மண்டலத்தில் முதற்கட்டமாக பெரம்பலூர் நகரில் முதற்கட்டமாக 29 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமரா கொண்டு 24 மணிநேரமும் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

பெரம்பலூர் நகரில் நடக்கும், குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு தரும் வகையிலும், விபத்துகளை குறைக்கும் வகையிலும், நகர் முழுவதும் 60 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்க திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக பெரம்பலூர் நகரில், புதிய, பழைய பேருந்து நிலையங்கள், 3 ரோடு, 4 ரோடு, பாலக்கரை, சங்கு, தேரடி, அம்பேத்கர் சிலை, கடைவீதி, அமராவதி – கனரா வங்கி ( பழைய நகராட்சி அலுவலகம் ), அரசு மருத்துவமனை, ஆத்தூர் ரோடு பி.எஸ்.என்.எல், அலுவலக சாலை, வர் பிரிவு, உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் 13 சுழலும் கேமாராக்களுடன் 28 கேமராக்கள் ரூ.36 லட்சம் மதிப்பில் மாவட்ட நிர்வாகத்தின் நிதியுதவி கொண்டு அமைக்கப்பட்ட அதிநவீன துல்லியம் மிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டது. அதன், திறப்பு விழா இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் வரதராஜன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வரதராஜன் தெரிவித்ததாவது: திருச்சி மண்டலத்தில் முதன் முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் அதிநவீன கண்காணிப்பு காவல் கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே பல்வேறு சம்பவங்களை துல்லியமாக காண முடியும், கேமராவில் பதிவாகும் காட்சிகளின் தகவல்கள் தொடர்ந்து 30 நாட்கள் இருக்கும், தேவைப்படும் போது எடுத்து சேமித்தும் வைத்துக் கொள்ளமுடியும், 24 மணிநேரமும், இந்த கண்காணிப்பு மையம் இயங்கும், பின்னர், திருமாந்துறை சுங்க சாவடி, பாடாலூர் ஊட்த்தூர் பிரிவு, டி.களத்தூர் சந்திப்பு, உடும்பியம், மருதையான் கோவில், பெண்ணகோணம், (லப்பைக்குடிகாடு), அத்தியூர், நமையூர், விஜயகோபாலபுரம், சிறுவாச்சூர், கலெக்டர் ஆர்ச், தண்ணீர் பந்தல், முருக்கன்குடி பிரிவு ரோடு, வாலிகண்டபுரம் சந்திப்பு, வி.களத்தூர் கடைவீதி, பெரம்பலூர் ஆட்சியரக நுழைவு வாயில், அரசு மருததுவமனை, அமராவதி, செட்டிகுளம் பேருந்து நிலையம், தேனூர் உள்ளிட்ட ஊர்களுக்கு இத்திட்டம் படிப்படியாக மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

தொடக்க விழாவின் போது மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தக்குமார், காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்திரா, ஏ.டி.எஸ்.பி ஞானசிவக்குமார், டி.எஸ்.பிக்கள் கார்த்திகேயன் , ஜவகர்லால், குமராவேலு, ஊர்க்காவல் படை மண்டலத் தளபதி ஜெ.அரவிந்தன் மற்றும், காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!