Truck-bike collision in Perambalur: One killed!
பெரம்பலூரில் இன்று காலை நடந்த விபத்தில் தனியார் நிறுவன மினரல் வாட்டர் கம்பனி ஊழியர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகேயுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகன் காமராஜ் (47). இவர், பெரம்பலூரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மினரல் வாட்டர் கம்பனியில், ஊழியராக உள்ளார்.
இன்று காலை அங்கிருந்து வடக்குமாதவி கிராமத்திலுள்ள அவரது உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, டாஸ்மாக் கிடங்கு அருகே உள்ள பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது, தண்ணீர்பந்தல் பகுதியிலிருந்து துறையூர் நோக்கிச் சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, காமராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காகா பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீஸார் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிர தேடி வருகின்றனர்.