Truck-bike collision near Perambalur; 2 youth killed!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள ஆக்கனூர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் விஜய் (30), திருமணமானவர். இவருக்கு மனைவி ருத்ரா (19), மகள் லதிஷா ( 1), உள்ளனர்.
விஜய் தனது பைக்கில், தனது சித்தியின் மகனான, பெரம்பலூர் மாவட்டம், கிழுமத்தூர் குடிக்காடு கிராமத்தை தினேஷ் (23) என்பவரை அழைத்துக் கொண்டு, துபாயில் வேலை பார்த்து வரும், தனது தந்தைக்கு அரியலூரில் ள்ளள மருத்துவமனையில் நீரழிவு நோய் மாத்திரை மருந்துகளை வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, துங்கபுரம் அருகே உள்ள ஆணைவாரி ஓடை பாலம் அருகே வந்த போது எதிர்பாரத விதமாக, எதிரே சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.