Truck crash into a tree; One kills!
பெரம்பலூர் அருகே, புளியமரத்தில் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையிலிருந்து திருச்சியை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு லாரி சென்றுக் கொண்டிருந்தது, பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர்பந்தல் அருகே உள்ள ஜோசப் தனியார் பள்ளி அருகே, அதிகாலை 5 மணியளவில், லாரி வந்தபோது, அப்பகுதியில் சாலையோரத்தில் இருந்து புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் பயணம் செய்த, விழுப்புரம் மாவட்டம், ஏ.பி., குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அசோக் மகன் அன்பு (30), சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும், இந்த விபத்தில், திருவண்ணாமலையை சேர்ந்த நடராஜன் மகன் நவீன் (23), கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் மகன் அரவிந்த், விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார்( 30), ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்து, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.