truck drivers in Given tea, Highway in the night-time scene on behalf of the Namakkal police to prevent the Accident,

நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் விபத்துக்களை தடுக்க லாரி டிரைவர்களுக்கு நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் டீ வழங்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை தூக்க கலக்கத்தில் வரும் லாரி டிரைவரர்களால் விபத்து ஏற்பட்டு அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதைதடுக்கும் பொருட்டு கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா வழிகாட்டுதலின் பேரில், சேலம் சரக டிஐஜி செந்தில் குமார் அறிவுரையின் படி நாமக்கல் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எஸ்பி அருளரசு லாரி டிரைவர்களுக்கு டீ வழங்க உத்தரவிட்டார்.

இதன் பேரில் நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்கும் விதமாக நேற்று காலை2 மணி முதல் காலை 5 மணி வரை வேலூர் காவிரி ஆற்றுப்பாலம் போலீஸ் செக் போஸ்ட், கீரம்பூர் டோல் கேட், வெண்ணந்தூர்-ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய இடங்களில் வாகன டிரைவர் களுக்கு டீ வழங்கியும், சீட்பெல்ட் அணிந்து பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளவும், தூக்க கலக்கத்தில் வாகனங்களை ஓட்டாமல் அருகில் உள்ள நெடுஞ்சாலை வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுத்து செல்லவும் அறிவுரை வழங்ககப்பட்டது. இதன்மூலம் டிரைவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தி பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!