Villagers held captive the trucks that poured gravel to pave the road near Perambalur!

பெரம்பலூர் அருகே அளவிற்கு அதிகமாக சிப்ஸ் ஜல்லிகளை ஏற்றி சென்ற லாரிகள் வழியெங்கும் கொட்டி சென்றதால் 2 பேர் தடுக்கி விழுந்த சம்பவத்தில் பொது மக்கள் ஆத்திரமடைந்து லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் அருகே உள்ள எசனை மற்றும் ஆலங்கிழி பகுதியில் கற்குவாரிகள் இயங்கி வருகின்றன. இரவு பகலாக இங்கிருந்து உள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் டன் கணக்கில் ஜல்லி கற்கள், சிப்ஸ், மற்றும் பாறைகள் கனரக லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.

இதில் எடுத்துச் செல்லப்படும் சிப்ஸ் ஜல்லிகற்கள் உரிய பாதுகாப்பு இன்றி எடுத்துச் செல்லப்படுவதால் நேற்றிரவு வழிநெடுக கொட்டி கிடந்ததால், இன்று காலை பைக்கில் சென்ற இருவர் விழுந்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த எசனை – கீழக்கரை இரு கிராம மக்கள் ஒன்று திரண்டு சாலைகளில் ஆங்காங்கே கனரக லாரிகளை நிறுத்தி வைத்து சிறைப்பிடித்தனர். குவாரி மேலாளர் – பணியாளர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இது தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்ததை நடத்தினர்.

ஊராட்சி சார்பில் சாலைகளில் கொட்டிகிடக்கும் ஜல்லிக்கற்களை சுத்தப்படுத்தி தருவதாகவும், லாரிகளை விடுக்கவும் கோரினர். மேலும், அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், அளவிற்கு அதிகமாக ஜல்லிகளை ஏற்றி வரும் வாகனங்களை சிறைப்பிடித்து, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும், மேலும், அதை பறிமுதல் உரிய நடவடிக்கை எடுக்கவும் உறுதி அளித்தன் பேரில் கலைந்து சென்றனர். அதனால் அப்பகுதியில் இன்று காலை சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் வாகனம் செல்ல வேண்டி முன்னதாகவே பொதுமக்கள் சாலை போக்குவரத்தை வழி செய்து கொடுத்தனர்.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!