Trying to break ATM in Perambalur Guard tried to catch the skull busting !!

IDBI ATM Perambalur

பெரம்பலூர் நகரில் ஏ.டி.எம்.யை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற போது ரோந்து பணியில் வந்த போலீசார் கொள்ளையனை மடக்கி பிடிக்க முயன்ற சம்பவத்தில் ஊர்க் காவல் படையை சேர்ந்த ஒருவரின் மண்டை உடைத்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் அரசுக்கு சொந்தமான வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. அந்த வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் (பணம் வழங்கும் தானியங்கி எந்திரம்) வங்கியின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. மர்ம நபர் ஒருவர், விளக்குகளை அணைத்துவிட்டு, ஏ.டி.எம்-மை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்று கொண்டிருந்தான், இதை அவ்வழியே சென்ற இரு சக்கர வாகன ஓட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற காவல்துறையினர் அவனை பிடிக்க முயன்ற போது கொள்ளையனுக்கும், காவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக கொள்ளையன் தப்பி செல்ல முயன்ற பொது காவலர்கள் அவனை தடுத்து பிடிக்க முயன்றனர். அப்போது கொள்ளையன் கையில் வைத்திருந்த கட்டையால் காவலர்களை பலமாக தாக்கினான். அதில் பெரம்பலூர் மாவட்டம், அ.மேட்டூரை சேர்ந்த கண்ணன் (வயது 35) என்பவரின் மண்டை உடைந்தது.

தனியாளாக கண்ணன் சென்றதால் அவரை தாக்கிவிட்டு கொள்ளையன் தப்பி முயன்ற போது நடுரோட்டிலேயே தள்ளு ஏற்பட்டது. மண்டை உடைந்த நிலையில் ஊர்க்காவல்படை கண்ணன் துணிச்சலாக போராடி கொண்டிருந்தார். மேலும், அங்கு வந்த போலீசார் தப்ப முயன்ற கொள்ளையனை மடக்கி பிடித்தனர்.

பின்னர், விசாரணையில், கொள்ளையன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இடையப்பட்டி சேர்ந்த துரைசாமி மகன் தனுஷ் (வயது 27), என்பதும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக சூப்பர் வைசராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்துள்ளது.

கொள்ளையன் தனுஷ்

வங்கி அதிகாரிகளின் புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளையன் மற்றும் காயமடைந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!