Trying to kidnap mysterious mob school student for human organs near Perambalur!

பெரம்பலூர் அருகே பள்ளி முடித்துவிட்டு பேருந்துக்காக காத்திருந்த பத்தாம் வகுப்பு மாணவனை காலி ஊசி போட்டு கடத்த முறன்ற சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. சென்னையில டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது குடும்பத்தினர் பிரம்மதேசத்தில் வசித்து வருகின்றனர். அவரது மகன் சத்ரு (வயது 14), இவர் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தலில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.

தினசரி பிரம்மதேசத்தில் இருந்து பள்ளிக்கு பேருந்தில் வந்து செல்வார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் உடன்படிக்கும் மாணவர்கள் முன்னதாக பேருந்தில் கிளம்பி சென்றுவிட்டனர். சத்ரு மட்டும் தனியாக செல்வதற்கு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.

அப்போது அங்கு மர்ம கும்பலை சேர்ந்த ஒருவர் சென்னையில் இருக்கும், சத்ருவின் தந்தையார் செல்போனில் பேசுவதாக கூறி பேச்சு கொடுத்து போனை கொடுத்து பேச செய்தனர். அப்போது அவரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து அழைத்து பின்பகுதிக்கு சென்றனர்.

செல்போனில் பேசிக் கொண்டு இருக்கும் போது அந்த மர்ம நபர் காலியான ஊசியை எடுத்து காற்றை இழுத்து ஊசியை மாணவன் சத்ருவின் வலது கையில் செலுத்தினான். உடனடியாக அவனிடமிருந்து விடுவித்து கொண்ட மாணவன் அழுத படியே பேருந்தில் ஊருக்கு சென்று நடந்த விசயத்தை தயாரிடம் தெரிவித்தார்.

உடனடியாக அங்கிருந்தவர் வாலிகண்டபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து பின்னர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் மருத்துவர்கள் தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காலி ஊசி செலுத்தி மாணவணை , மனித உடல் உறுப்புகளுக்காக கடத்தும் கும்பலாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அப்பாவி சிறுவன் மீது ஊசி காரணம் என்ன என்றும், முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதாவது உள்நோக்கமா என்ற கோணத்தில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடததி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரம்பலூர் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தான் குழந்தை கடத்தும் கும்பல் என பல அப்பாவிகள் தாக்கப்பட்டு இறந்த நிலையில் இந்தப்பிரச்சனை புதிய வடிவில் சிக்கலை உண்டாக்கி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!