Two arrested in In Perambalur the charge of selling alcohol without permission, the investigation revealed that struck northern state merchant.

bad_criminal_arrest_shackle_handcuff_

பெரம்பலூரில் அனுமதியின்றி மது விற்பனை செய்த இருவர் கைது : வட மாநில வியாபாரியை தாக்கிய விசாரனையில் தெரியவந்தது.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகே வட மாநில இளைஞர் ஒருவர் பெல்ட் விற்பனையில் செய்து கொண்டிருந்தார்.

அவரிடம் பெல்ட் வாங்க சென்ற இரண்டு வாலிபர்கள், தாங்கள் கேட்ட விலைக்கு பெல்ட் தரவில்லை என்பதால், அவரை சரமாரியாக தாக்கியதோடு, அவரிடம் இருந்த சில பெல்ட்களை பறித்து கொண்டு அருகில் இருக்கும் டாஸ்மாக் பாருக்கு சென்று விட்டனர்.

இதனால் வேதனையடைந்த வட மாநில வியாபாரி அப்பகுதியில் பணியில் ஈடுபட்ட போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த காவலரிடம் நடந்தவற்றை கூறி, அவர்களிடமிருந்து பெல்ட்டுகளை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அந்த காவலர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் பாருக்குள் சென்று பார்த்த போது உரிய பெல்ட்டுகளை பறித்து சென்ற வாலிபர்கள் அனுமதியின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த பெல்ட்டுகளை கைப்பற்றி வட மாநில வாலிபரிடம் ஒப்படைத்தனர். மேலும் 300க்கும் மேற்ப்பட்ட மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொது மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையத்தில் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!