Two arrested in the theft case near Namakkal: 33 pound jewelry confiscated

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகை, இரு வாகனம் திருடிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.இருவரும் அளித்த தகவலின்பேரில் 33பவுன் நகை, 3 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் பரமத்தி சாலை போதுப்பட்டி பிரிவில் நாமக்கல் குற்றப்பிரிவு போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரமத்தி வேலுாரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் போலீஸாரைக் கண்டதும் வண்டியுடன் திருப்பி தப்ப முயன்றனர். அவர்களை காவல் துறையினர் வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் ராமநாபுரம் மாவட்டம் திருவாடனையைச் சேர்ந்த திலீப்குமார் (23), திண்டுக்கல் மாங்கரையைச் சேர்ந்த பாலமுருகன் (37) எனத் தெரியவந்தது.
மேலும், நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வீடு புகுந்து நகை, வாகனங்களை திருடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து ரூ. 3 லட்சத்து 35ஆயிரம் மதிப்புள்ள 33.4 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 3 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.