பெரம்பலூர் பகுதியில் இன்று நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் அரசுப்பேருந்து ஒட்டுநர் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான்பாபு மகன் சையது காதர்பாஷா(25) ,இவர் இன்று அதிகாலை 5மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் பெரம்பலூர் புறவழிச்சாலை கோனேரிப்பாளையம் பகுதியில் வந்த போது முன்னேசென்ற அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி படுகாயமடைந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சியில் கொண்டு செல்லப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் மற்றொரு விபத்து:
பெரம்பலூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ரகுபதி(42). இவர் அரசு போக்குவரத்து கழகத்தின் பெரம்பலூர் பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் நாரணமங்கலத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது பெரம்பலூரிலிருந்து காரை ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு சொந்தமான நடமாடும் மருத்துவ சேவை வாகனம் ரகுபதி ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் ரகுபதி படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்திற்கு காரணமான வாகனத்தின் டிரைவர் வேலுச்சாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.