Two persons arrested for allegedly extorting Rs 78 lakhs 80,000 in Perambalur

பெரம்பலூரில் கடந்த மாதம் 18ஆம் தேதி இரவு 2000 ரூபாய் நோட்டுக்களை 500 ரூபாய் நோட்டுக்களாக மாற்றித்தருவாதாக கூறி, மதுரையை சேர்ந்த 6 பேரிடம் 78 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பறித்து சென்ற வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமம் பாப்பாக்கரையை சேர்ந்த சுரஷ் மற்றும் அவனது கூட்டாளியான பெரம்பலூரை சேர்ந்த நகைக்கடை கருணாநிதி ஆகியோரை பெரம்பலூர் தனிப்படை போலீசார் தஞ்சாவூரில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து கைது செய்து, பெரம்பலூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பணத்தைப் பறிகொடுத்தவர்களில் ஒருவரான மதுரையை சேர்ந்த சௌந்தரபாண்டியன் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் காவல் நிலையத்தில் முதற்கட்டமாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கடந்த மாதம் 24ஆம் தேதி துறைமங்கலம் ரமேஷ்(42), நுாத்தப்பூர் கண்ணன்(47), அனுக்கூர் செந்தில்,(49), மற்றும் சுரேஷின் மாமியாரான பெரம்பலூரைச் சேர்ந்த வசந்தா(50), மனைவி சங்கீதா(32), ஆகிய ஐந்து பேரை கைது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 5 பேரிடமிருந்து 70 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். இந்நிலையில் தலைமறைவான முக்கிய குற்றவாளியான சுரேஷ் உட்பட நான்கு பேரை மூன்று தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே முக்கிய குற்றவாளியான சுரேசும் அவனது கூட்டாளியும் தஞ்சாவூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!