
Two Wheeler collision near Namakkal retired postal department official killed
நாமக்கல் அருகே இரண்டு டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓய்வு பெற்ற தபால்துறை அலுவலர் பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல் மாவட்டம் ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்தவர் நல்லுசாமி (65), ஓய்வுபெற்ற தபால்துறை ஊழியர். இவர் சம்பவத்தன்று இரவு பரமத்தி அருகே கோனூரில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக தனது டூ வீலரில் நாமக்கல்லில் இருந்து கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
பரமத்தி அருகே உள்ள காரைக்கால் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த மற்றொரு டூ வீலர் நல்லுசாமி மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நல்லுசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயமடைந்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.