Two-Wheeler for AMMA Vehicle Scheme, Subcidy Grants Program Extension of time for application

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுதுள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.25,000- அல்லது வாகனத்தின் மொத்த தொகையில் 50 சதவீத தொகை இரண்டில் எது குறைவோ அத்தொகையை அரசு மானியமாக வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.31,250ஃ- வழங்கப்படும். 125 சிசி-க்கு குறைவான கியர்லெஸ் வாகனத்தை பயனாளிகள் தங்களது சொந்த நிதியில் இருந்தோ, வங்கி கடன் அல்லது கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்தோ கடன் பெற்று வாங்கலாம். மானியம் பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

பயனாளிகள் 18 முதல் 40 வயது உள்ளவராகவும் விண்ணப்பிக்கும் பொழுது இரு சக்கர வாகன ஓட்டுநர் அல்லது பழகுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000- க்கு மிகாமல் இருக்க வேண்டும். மானியத்தொகை போக இருசக்கர வாகனத்தின் மீதத் தொகை செலுத்த விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

மேலும், அமைப்புசார் மற்றும் அமைப்புச்சாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், சுயமாக சிறு தொழில் செய்யும் பெண்கள், அரசு சுய நிதி உதவி பெறும் நிறுவனங்கள்ஃதனியார் நிறுவனங்கள், அரசுத் திட்டங்கள், சமூக அடிப்படை நிறுவனங்கள், ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், மகளிர் கற்றல் மையம் ஆகிய நிறுவனங்களில் தொகுப்பூதியம், தினக்கூலி அல்லது ஒப்பந்த ஊதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் மகளிர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள், பயனாளிகள் 8-ஆம் வகுப்பு (தேர்ச்சி அல்லது தோல்வி) படித்திருக்க வேண்டும்.

ஏற்கனவே 2017 – 18 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பித்து மானியம் கிடைக்கப்பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து 31.01.2019 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!