Udayam Certificate for Industrial Companies; Perambalur Collector Karpagam Information!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறைகளை மத்திய அரசு ஜீலை 1 முதல் இந்தியா முழுவதும் மாற்றி அமைத்துள்ளது. ரூ. 1 கோடிக்கு மிகாமல் இயந்திர தளவாட முதலீடு மற்றும் ரூ. 5 கோடிக்குள் மொத்த விற்பனை அளவு (Turnover) உள்ள நிறுவனங்கள் குறு நிறுவனங்கள் (Micro) என்று வகைப்படுத்தப்படுகிறது.

இயந்திர தளவாட முதலீடு ரூபாய் 1 கோடிக்கு அதிகமாகவும் ரூபாய் 10 கோடி வரையிலும் மற்றும் மொத்த விற்பனை அளவு (Turnover) ரூபாய் 5 கோடிக்கு அதிகமாகவும் ரூபாய் 50 கோடிக்கு குறைவாகவும் உள்ள நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் (Small) என்று வகைப்படுத்தப்படுகிறது.

இயந்திர தளவாட முதலீடு ரூபாய் 10 கோடிக்கு அதிகமாகவும் ரூபாய் 50 கோடி வரையிலும் மற்றும் மொத்த விற்பனை அளவு (Turnover) ரூபாய் 250 கோடி வரையிலும் உள்ள நிறுவனங்கள் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Medium) என்று வகைப்படுத்தப்படுகிறது.

தற்போது இயங்கி வரும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழில் நிறுவனங்களுக்கான சான்றை புதிய உத்யாம் பதிவு இணையதள முகவரியில் www.udyamregistration.gov.in சுய உறுதி மொழியுடன் பதிவு செய்து இலவசமாக பெற்று கொள்ளலாம்.

இணையதளத்தின் மூலம் பெறப்படும் சான்றிதழ் உத்யாம் பதிவு சான்றிதழ் என்றும் இந்த பதிவு எண் உத்யாம் பதிவு எண் என்றும் அழைக்கப்படும். நிறுவனத்தின் இயந்திர தளவாட மதிப்பு மற்றும் மொத்த விற்பனை அளவு (Turnover) வருமான வரி தாக்கல் மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

புதியதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு சுய உறுதிமொழியின் அடிப்படையில் இயந்திர தளவாட மதிப்பு மற்றும் மொத்த விற்பனை அளவு (Turnover) அடிப்படையில் இணையதளம் வழியாக சான்றிதழ் வழங்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யாம் பதிவு இணையதளத்தில் இலவசமாக (www.udyamregistration.gov.in) பதிவு செய்து பயன் பெறலாம் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!