UjJala Day ceremony near: Free Gas stove awarded near Perambalur
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அருகே உள்ள வயலூர் கிராமத்தில் மத்திய அரசின் சார்பில் உஜ்வலா தின விழா நேற்று நடைபெற்றது.
இதன் முலம் எஸ் சி, எஸ் டி, மற்றும் மலைவாழ் மக்களுக்கு டெபாசிட் தொகை இல்லாமல் இலவச சமையல் கேஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் திட்டக்குடி பாரத் கேஸ் மற்றும் வேப்பூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் உஜ்வலா தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட துணைதலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். அகிலன், வேப்பூர் ஒன்றிய தலைவர் கண்ணன், செயலாளர் அசோக்ராஜ், பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முன்னாள் வேப்பூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முருகேசன், ஆகியோர் பாதுகாப்பாக கேஸ் பயன்படுத்துவது குறித்து சிறப்புரையாற்றினர்.
விழாவில் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த தனலெட்சுமி, ராஜகுமாரி, செல்லம்மாள், கலைவாணி, வெண்ணிலா, மகாதேவி, பவானி, லெட்சுமி உட்பட 31 நபர்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது. முடிவில் கிளை தலைவர் சுப்ரமணியன் நன்றியுரை ஆற்றினார்.