Unbiased action needed to put an end to alcohol poisoning: Kongu Velalaka Gounders Association
கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவையின், பொதுச்செயலாளர் எஸ்.சூர்யமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட விஷச்சாராய மரணம் ஜீரணிக்க முடியாத செயலாகும் அதிகாரிகளின் மெத்தன போக்கை உணர்ந்த தமிழக முதல்வர் துரித நடவடிக்கை எடுத்ததை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தாலும் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்க பட வேண்டும்,மேலும் ஒரு சில தினங்களாக தமிழகம் முழுமையும் காவல்துறை விரட்டி விரட்டி கைப்பற்றும் சாராய ஊரல்களே இதற்கு சான்றாகும். தமிழகத்தில் கொத்துக் கொத்தாக விஷச்சாராயத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தபட்ட, ஓடுக்கபட்ட மக்கள் மரணத்தில் இருந்து தடுக்க அதிகாரிகளை பணியிடை நீக்கம் மற்றம் பணியிடை மாற்றம் செயலாகாது.
தமிழகம் முழுவதும் சாராயம் மற்றும் போதை பொருள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமாயின் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி அக்கட்சியின் அடிப்படை வாரியாக மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் பகுதி உள்ளிட்ட ஆளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் அல்லது இது போன்ற செயல்களுக்கு உறுதுணையாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியின் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கும் பட்சத்திலேயே இதுபோன்ற குற்ற செயல்கள் முற்றிலும் அகற்றப்படும். எந்த கட்சி ஆளும் கட்சியாக இருந்தாலும் அக்கட்சியின் தலைமை இது போல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும், என அதில் தெரிவித்துள்ளார்.