Ungalai Thedi Ungal Ooril Scheme: Collector Karpagam in Chettikulam village near Perambalur received petitions!

மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கலெக்டரும், ஒவ்வொரு மாதமும் கடைசி புதன்கிழமையில் வட்ட அளவில் 24 மணி நேரம் தங்கி கள ஆய்வில் ஈடுபடுவார்கள் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் இந்த மாதம் கலெக்டர் கற்பகம், ஆலத்தூர் ஒன்றியம் செட்டிகுளம் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
போலீஸ் எஸ்.பி., ஷ்யாம்ளாதேவி உடனிருந்தார்.

செட்டிக்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கற்பகம், உடனடியாக தீர்வு காணக் கூடிய மனுக்களின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கவும், துறைசார்ந்து வழங்கப்பட்டுள்ள அனைத்து மனுக்களின் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சம்மந்தப்பட்ட துறை அலுவலரக்ள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பின்னர், செட்டிக்குளம் அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம்குறித்தும், மாணவ மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைறையும் பார்வையிட்டார். அப்போது கழிவறைகளில் தண்ணீர் வராததை அறிந்த அவர், அப்பள்ளியில் தண்ணீரேற்றும் நிலை அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

மேலும், பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும், கட்டடக் கழிவுகளை பள்ளி வளாகத்திற்குள் போடாமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும், பள்ளியைச் சுற்றியுள்ள கழிவுநீர் வாய்க்கால்களை முறையாக கால இடைவெளியில் தூய்மை செய்தி வேண்டும், பள்ளி தலைமையாசிரியருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் உத்தரவிட்டார்.

பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சித்லைவர் அவர்கள், பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்களை படிக்கச்சொல்லி அவர்களின் உச்சரிப்பு, வாசிக்கும் திறன் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், குழந்தைகள் மையத்தை பார்வையிட்ட கலெக்டர் கற்பகம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுப்பொருட்கள் போதிய அளவில் இருப்பு உள்ளதா, முறையாக அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படுகின்றதா, குழந்தைகளின் உயரம், எடை போன்றவை கண்காணிக்கப்படுகின்றதா, அதற்கான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றதாக என்பது குறித்தும் பார்வயிட்டார்.

அதனைத் தொடர்ந்து ரேசன் கடைக்குச்சென்ற அவர், அந்த கடைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்ப உணவுப் பொருட்கள் இருப்பில் உள்ளதா என்றும், உணவுப்பொருட்களை வாங்க வந்திருந்த பொதுமக்களிடம் அனைத்து பொருட்களும் முறையாக வழங்கப்படுகின்றதா, ஏதேனும் குறைகள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.

மேலும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்திய அவர், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் குறித்தும், அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலரகள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி, அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக சென்று சேரும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்றும், ஊராட்சிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும், குப்பைகளை தினந்தோறும் அப்புறப்படுத்த வேண்டும், கழிவுநீர் வாய்க்கால்களில் தண்ணீர் தேங்காத வகையில் முறையாக அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!