Unidentified girl’s body near in Perambalur: Police investigate
பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் கிராமத்தின் மேற்கு பகுதியில் செல்லியம்மன் கோயில் பகுதி உள்ளது. அந்தக் கோயிலில் இருந்து 1 கி.மீ தொலைவிற்கு அப்பால் உள்ள மலையடிவாரம் ஒட்டிய பகுதியில் 60 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக பெரம்பலூர் போலீசாருக்கு இன்று காலை தகவல் வந்தது.
இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக அப்பெண் இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என்றும், அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி போலீசார் உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்பெண் நகைக்காக மற்றும் பண ஆதாயங்களுக்காக கொலை செய்யப்பட்டரா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.