Unidentified people ransacked and smashed the AIADMK celebrity’s hotel near the sweet factory in Perambalur!
பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலையில் பிரபல ஹோட்டல் மற்றும் ஸ்வீட் ஸ்நாக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதன் அருகே பிரியம் என்ற ஹோட்டலை அதிமுக பிரமுகரான விளாமுத்துரை சேர்ந்த சண்முகம் மகன் மாமுண்டிதுரை என்பவர் நடத்தி வருகிறார். இவரது மனைவி தற்போது பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நொச்சியம் கிராமத்தின் கவுன்சிலராக உள்ளார்.
நேற்று தீபாவளி என்பதால், கடைக்கு விடுமுறை விடப்பட்டநிலையில், சுமார் மணி அளவில் அங்கு வந்த, அடையாளம் தெரியாத 4 பேர் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு, கடையை சூறையாடினர். கடையில் இருந்த டேபிள், சேர், பிரிட்ஸ், மற்றும் டி.வி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
இது குறித்து மாமுண்டிதுரை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதோடு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விளம்பரம்: