Unidentified vehicle collides with truck driver kills near Perambalur
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஜய கோபாலபுரம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்து கிடந்த லாரி டிரைவரின் சடலத்தை பாடாலூர் கைப்பற்றி கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்து கிடந்தவர், வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, நத்தமேடு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கோபி என்பதும் லாரி டிரைவரான இவர், பிளாஸ்டிக் மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் அருகே உள்ள எம்.ஆர்.எப் டயர் ஃபேக்டரி க்கு வந்திருந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. போலீசார்இது தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.