Uniforms for Nationally Successful Athletes: Perambalur Collector V. Santha Information

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2018-2019-ஆம் ஆண்டு தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டுச் சீருடைகள் வாங்கிட ஊக்க உதவித்தொகையாக கீழ்க்காணும் விபரப்படி வழங்கப்பட உள்ளது.

ட்ராக் சூட்-1 செட், டி-சர்ட்-2 நெம்பா;, சாh;ட்ஸ்-2 நெம்பர், வார்ம் அப் சூ மற்றும் சாக்ஸ்- 1 செட் ஆகியவை அடங்கிய ஸ்போர்ட்ஸ் கிட் ரூ.6000-க்கும் , ட்ராக் சூட்-1 செட், டி-சர்ட்-1 நெம்பர், சார்ட்ஸ்-1 நெம்பர், வார்ம் அப் சூ மற்றும் சாக்ஸ்- 1 செட் ஆகியவை அடங்கிய ஸ்போர்ட்ஸ் கிட் ரூ.4000- க்கும், ட்ராக் சூட்-1 செட், வார்ம் அப் சூ மற்றும் சாக்ஸ்- 1 செட் ஆகியவை அடங்கிய ஸ்போர்ட்ஸ் கிட் ரூ.2000- க்கும் என ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

01.04.2018 முதல் 31.03.2019 வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாநில விளையாட்டுச் சஙகங்கள் மூலம் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இதில் இந்திய பள்ளி விளையாட்டுக்கள் கூட்டமைப்பு (SGFI) நடத்தும் போட்டிகளுக்கு வழங்கப்பட மாட்டாது.

எனவே தகுதியுள்ளவர்கள் பெயர் முழு முகவரி மற்றும் சான்றிதழ்களின் நகல் ஆகிய விவரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் 07.09.2020 தேதிக்குள் நேரில் சமர்ப்பித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!