Union level training centers for all competitive examinations : perambalur District CEO

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / ஆதி திராவிட நல மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகள் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளை எதிர் கொள்வதற்கு ஏதுவாக ஒன்றிய அளவில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளது.

இப்பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தங்களின் பெயர்களை www.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளிகளிலேயே 26.10.2017 அன்று வரை பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவு செய்யும் போது மாணவர்கள் தாங்கள் பயிற்சி பெற விரும்பும் பயிற்சி மையங்களை ஆன்லைனிலேயே தெரிவு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

ஆகவே. இவ்வாய்ப்பினை பெரம்பலுhர் மாவட்டத்தில் உள்ள அரசு ஃ ஆதி திராவிட நல மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2017- 2018 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

மேலும் தகவல்களுக்கு தொடர்புடைய பள்ளிகளின் தலைமையாசிரியர்களை அணுகி பயன்பெறலாம், என அறிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!