Upcoming local body elections in all wards, DMDK candidates contest: Perambalur party meeting resolution!

பெரம்பலூர் நகர தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நகர செயலாளர் சி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட தொழில் சங்க துணைத் தலைவர் டி. இளையராஜா வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் கே.ராஜேந்திரன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் தவசி.அன்பழகன், உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் கொ.தங்கமணி உள்ளிட்ட பலர் ஆலோசனைகள் வழங்கினர். நகர பொருளாளர் சூரியக்குமார், அவைத்தலைவர் ஆசைத்தம்பி உள்ளிட்ட மகளிரணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், விபத்தில் இறந்த முப்படை தளபதிக்கும், கட்சியினருக்கும் இரங்கல் மற்றும் மாணவர்கள் பஸ்சில் படியில் தொங்கி கொண்டு செல்வதை தடுக்க கூடுதல் பேருந்துகள் தேவைப்படும் வழித்தடத்தில் இயக்க வேண்டும், வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும், அனைத்து வார்டுகளிலும் போட்டியிட்டு, அதிக வாக்குகள் பெற்று வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும் மழையால் பாதிக்கபட்டவர்களுக்கு உரிய நிவாரணம் தமிழக அரசு வழங்க வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர மகளிரணி அவைத்தலைவர் நித்யா நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!