Upon the rise of Hindu conference tomorrow in Namakkal 6 thousand Sala Girama Ratha Yatra
நாமக்கல் : நாமக்கல்லில் இன்று நடைபெற உள்ள இந்து தன் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு 6 ஆயிரம் சாளகிராமங்கள் கொண்ட ரத யாத்திரை நடைபெற்றது.
நாமக்கலில் ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நாளை 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நாமக்கல் – சேலம் ரோடு பொம்மை குட்டை மேடு லட்சுமி திருமண மண்டபத்தில் இந்து தன் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதில் இந்து மதம் நேற்று, இன்று, நாளை என்ற தலைப்புகளில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், சேவா இன்டர்நேஷனல் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், துறவி ரமண பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேச உள்ளனர்.
நிகழ்ச்சியில் நாமக்கல் அண்ணா அரசு கல்லூரி பேராசிரியர் அரசு பரமேஸ்வரன், ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் பேசுகின்றனர்.
விழாவில் முன்பதிவு செய்துள்ள 6 ஆயிரம் பேருக்கு சாளக்கிராமம், துளசி செடி, பழனி விபூதி, மீனாட்சியம்மன் குங்குமம், மஞ்சள் மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று 6 ஆயிரம் சாளகிராமம் வைக்கப்பட்டுள்ள ரதம் அருள்மிகு பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு நாமக்கல் சாளகிராம மலையை சுற்றிவந்து ஸ்ரீ நரசிம்மர் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களில் வைத்து பூஜை செய்யப்பட்டு, பின்னர் லட்சுமி திருமண மண்டபத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
நாமக்கல் நகரில் திரளானவர்கள் இந்த ரதத்திற்கு வரவேற்பு அளித்தனர். இதனால் நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.