Vaikunda Ekadasi Festival in Perambalur District; In the temples, the gates of heaven open!


பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் நடந்த வைகுண்டஏகாதசி விழா சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவருக்கு தனிசன்னதி கொண்ட மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில், இந்த ஆண்டு வைகுண்டஏகாதசி விழா வெகு விமாரிசையாக இன்று காலை நடந்தது. வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ பெருமாள்ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் புதிய சொர்க்கவாசல் வழியாக சன்னதி தெருவிற்கு வந்து, கோவில் எதிரே உள்ள கம்பம் ஆஞ்சநேயரை 3 முறை வலம் வந்து ஆண்டாள் சன்னதியில் சேவை சாதித்தார்.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்.எல்.ஏ, பிரபாகரன், ராமக்கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சேர்மன் ம.சிவசுப்பிரமணியன் கோவில் முன்னாள் அறங்காவலர், தெ.பெ.வைத்தீஸ்வரன் உள்பட பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறந்த பின்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மூலவர் பெருமாளையும், உற்சவ பெருமாளையும் தரிசனம் செய்தனர்.

இன்றிரவு வெள்ளிகருடவாகனத்தில் வானவேடிக்கை, மேளதாளம் முழங்க சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்றைய தினம் பெருமாளுக்கு நாச்சியார் திருக்கோலத்துடன், மோகினி அலங்காரம் செய்யப்பட்டு திவ்யரூபதரிசனத்துடன் சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர். அடுத்த நாள் துவாதசி ஆராதனை நடந்தது.
விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மேற்பார்வையில் பட்டாச்சாரியார்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.

இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தில் எசனை, தொண்டைமாந்துறை, அரும்பாவூர், பூலாம்பாடி, கை.களத்தூர், பசும்பலூர், வி.களத்தூர், பாடாலூர், அம்மாபாளையம், லாடபுரம், கொளக்காநத்தம், குன்னம் வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று வெகுவிமரிசையாக வைகுண்ட ஏகாதசி நிழச்சி நடந்தது. இதில் 4 லட்சத்தும் மேற்பட்ட மக்கள் வைகுண்ட ஏகாதசியை விரதம் இருந்து கொண்டாடினர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!