பெரம்பலூர் : நீலகரி மாவட்டம், கோத்திகரி கடைவீதி ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழா ஏப்.13ந் தேதி புதன் கிழமை துவங்கி, மே – 3ந் தேதி செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 21 நாட்கள் நடக்கிறது.
அங்கு, 11ம் நாளான விழாவில் மாலை 3 மணி அளவில் நடக்கும் ” வாழ்க்கை பயணத்தை ரசனையுடன் அனுபவிப்பவர்கள் ” ஆண்களா!, பெண்களா !என்ற பட்டிமன்றத்தில் பெரம்பலூரை சேர்ந்த பேச்சாளரும், பேராசிரியருமான வைரமணி நடுவராக கலந்து கொள்ள உள்ளார்.
அதில் ஆண்களே என்ற தலைப்பில் பீனா சுதாகரன், புனிதவதனி திலக், கவுசல்யா, கரூர் ராஜேஷ், ஆகியோரும், பெண்களே என்ற தலைப்பபில் நாகராஜ், ஆனந்தன், சதீஷ்குமார், ஈரோடு தனவேல் ஆகியோரும் உரை நிகழ்த்துகின்றனர்.