Van overturns near Perambalur: 15 minor injuries; Padalur police investigation
சென்னையில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்செந்தூர் நோக்கி சென்ற தனியார் வேன்
பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஜயகோபாலபுரம் என்ற இடத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்து உபத்துக்குள்ளானது.
இந்த திடீர் சாலை விபத்தில் வேனில் பயணித்த 15-க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் பாடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.