பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இன்று காலை நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு எழுத 9 ஆயிரத்து145 பேர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி சீனிவாசன் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 11 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது.
31 முதன்மை கண்காணிப்பாளர்களும், 4 பறக்கும் படையினரும், 6 நடமாடும் குழுக்களும், 31 அறை ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டு, தேர்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. எழுத்துத் தேர்வு எழுத விண்ணப்பித்த 9 ஆயிரத்து 145 நபர்களில் 6 ஆயிரத்து 787 நபர்கள் தேர்வில் பங்கு கொண்டு தங்களது தேர்வினை எழுதினர்.
2,358 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. என மாவட்ட ஆட்சியர் அவரது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.